செவ்வாய், மே 08, 2012

மசூதியை இடிக்க புத்த பிக்குகள் கோரிக்கை

கலுதரா : இலங்கை யில் சமீபத்தில் புத்த பிக்குகளால் இடிக்கப்பட்ட தம்புள்ள மசூதியை முற்றிலும் இடித்து தள்ளும் படி அரசை கேட்டு கொள்ளும் பேரணி புத்த பிக்குகளின் தலைமையில் நடைபெற்றது.

சென்ற மாதம் ஆயிரக்கணக்கான புத்தர்கள் புத்த பிக்குகளின் தலைமையில் ஒன்று கூடி தம்புல்லா மசூதியை சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்று கூறி இடித்தனர். மேலும் அருகிலுள்ள கோவிலையும் இடிக்க போவதாக மிரட்டிய பெளத்தர்கள் அது பெளத்தர்களின் புனித பூமி என்றும் கூறினார்.

ஆனால் அப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு மேலாக அவ்விடத்தில் இருக்கிறது என்றும் அரசின் வரிச்சலுகையும் மத வழிபாட்டு தலம் எனும் முறையில் 12 ஆண்டுகளாக பெற்று வருகிறது என்றும் முஸ்லீம்கள் தரப்பில் கூறுகின்றனர். மசூதியும் கோவிலும் இடிக்கப்பட்டு வேறு இடத்தில் கட்டி தரப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு முஸ்லீம் அமைச்சர்களும் மத அறிஞர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சூழலில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பெளத்தர்கள் அவ்விடம் புனித பூமி என்றும் வேறு வழிபாட்டு தலங்கள் இருக்க கூடாது என்றும் கோஷமிட்டனர். மேலும் முஸ்லீம்களின் அழுத்தத்திற்கு பயந்து அரசின் மதமான புத்தமதத்தை பாதுகாக்காமல் இருந்து விட கூடாது என்றும் குரல் எழுப்பினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக