செவ்வாய், மே 08, 2012

பீகாரில் தீவிரவாதி என அஹ்மதை கைது செய்த கர்நாடக காவல் துறை : நிதிஷ் எதிர்ப்பு

பாட்னா : கர்நாடக காவல்துறை பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறி பீகாரில் கபில் அஹ்மதை கைது செய்துள்ளதற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 17, 2010ல் பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 15 நபர்கள் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் சம்பந்தமுள்ளதாக கூறி கபில் அஹ்மதை கர்நாடக காவல்துறையினர் தேடி வந்தனர்.
இச்சூழலில் அவரை பீகாரில் உள்ள பரஸ்மேலா கிராமத்தில் கைது செய்தனர்.
பீகார் மாநில காவல்துறைக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் தன்னிச்சையாக பீகாரின் உள் நுழைந்து கைது செய்த கர்நாடக காவல்துறையின் போக்கை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடுமையாக கண்டித்துள்ளார். எப்பகுதியில் கைது செய்கிறோமா அப்பகுதியில் உள்ள காவல்துறையின் அனுமதியோ அல்லது தகவலோ தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் நடந்து கொண்ட கர்நாடக காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிப்பதாக நிதிஷ்குமார் கூறினார்.
மேலும் பீகார் ஐ.ஜி அதிகாரபூர்வமாக கர்நாடக ஐ.ஜியிடம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மாவட்ட எஸ்.பியின் அறிக்கைக்கு பிறகு கர்நாடக காவல்துறையிடமும் உள்துறையிலும் இது குறித்து புகார் செய்யப்படும் என்றும் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக