- பாரதிய ஜனதா தலைவர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவரகள் கடுமையாக பேசி தாக்கியுள்ளனர்.
ராகுல் காந்தியை பாரதிய ஜனதா கட்சியினர் விமர்சனம் செய்ததை தொடர்ந்து, குஜராத் முதல்வரும், பா.ஜ. கட்சித் தலைவர்களுல் ஒருவரான நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷித் ஆல்லி கூறுகையில் நரேந்திரமோடியை ராகுல் காந்தியுடன் ஒப்பிட முடியாது. நரேந்திர மோடி வெள்ளைக் குதிரையில் பவனி வருபவர் அல்ல, அவர் எருமை மீது சவாரி செய்யும் எமன் என்று கூறினார்.
மத்திய தகவல் தொடர்பு மந்திரி மணீஷ் திவாரி கூறும் போது, 'குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த படுகொலைகள் போல் நாடு முழுவதும் நடக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்' என்று கருதுவதாக கூறினார்.3
சனி, ஏப்ரல் 06, 2013
மோடி எருமை மீது சவாரி செய்யும் எமன் - காங்கிரஸ் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக