- ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில்
உள்ள படகு வீட்டில் இன்று காலை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி
பிணமாக கிடந்தார். இவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என
போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சாரா எலிசபெத் (24) .இவர் கடந்த 2 மாதங்களாக ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் இருந்த படகு வீட்டில் தங்கிவந்தார்.இவர் இன்று காலை அவரது அறையில் கொலைசெய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அந்த பெண்ணின் அறை உடைக்கபட்டிருந்ததாலும், அவரது ஆடைகள் கிழிந்திருந்ததாலும் அவர் கற்பழிப்புக்கு பின்னர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, கொலைசெய்யப்பட்ட பெண் தங்கியிருந்த படகு வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தங்கியிருந்த டச்சு நாட்டு சுற்றுலா பயணி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த படகு வீட்டிற்கு வந்த அந்த பயணி நேற்று இரவு தன் உடமைகளை அனைத்தையும் விட்டுவிட்டு தப்பியோட முயன்ற போது சம்பவ இடத்தில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் கைது செய்யப்பட்டார்.3
சனி, ஏப்ரல் 06, 2013
ஸ்ரீநகர் ஆற்றில் வெளிநாட்டுப் பெண் பிணம்...கற்பழித்து கொல்லபட்டாரா..?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக