உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் உலக வங்கியின் துணை தலைவராகவும், பொருளாதாரப் பிரிவின் தலைவராகவும் இந்தியாவின் பொருளாதார நிபுணர் கெளசிக் பாசு நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக வங்கி பொருளாதார பிரிவு தலைவராக அக்டோபர் 1ம் தேதி, கெளசிக் பாசு பொறுப்பேற்பார். நிதித் துறை அனுபவத்துடன் சிறந்த கல்வியாளராகவும் இருப்பவர் கெளசிக்பாசு. உலக வங்கியின் செயற்பாடுகளுக்கு இவரது உதவி சரியானதாக இருக்கும். வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இவருக்கு நிறைந்த அனுபவங்கள் உள்ளன. உலக வங்கிக்கு இவர் பெரும் சொத்தாக இருப்பார். என்று தெரிவித்துள்ளார்.
அறுபது வயதாகும் கெளசிக் பாசு அக்டோபர் 1ம் தேதி முதல் உலக வங்கியில் பொறுப்பேற்கிறார். லண்டன் பொருளாதார பள்ளியில் பிஎச்.டி பட்டம் பெற்ற இவர் இந்திய நிதித் துறையில் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி கடந்த ஜூலை மாதம் தான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாண்டெக் சிங் அலுவாலியா, கல்பனா கோச்சார் ஆகிய இந்தியர்களுக்குப் பிறகு உலக வங்கியில் உயர்பதவி வகிக்கும் இந்தியராக கெளசிக் பாசு உள்ளார் .
இவ்வாறு உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக