வெள்ளி, செப்டம்பர் 07, 2012

'கட்சி தொடங்கப் போவதில்லை ' - அன்னா ஹசாரே பல்டி !

 அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். ஆதரவாளர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாகத் தெரிகிறது. ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்திவந்த அன்னா ஹசாரே திடீரென்று தனது இயக்கத்தை கலைத்தார். அதற்கு அவர் அணி சார்பாக அரசியலில் களமிறங்கப் போவதாகக் காரணம் கூறப்பட்டது. இந்நிலையில், அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கேஜ்ரிவால் பாரதிய ஜனதா கட்சியையும் விமர்சித்த நிலையில் கிரண்பேடி பாரதிய ஜனதாவை விமர்சிக்கக் கூடாது என்று காட்டம் தெரிவித்தார். அன்னா ஹசாரெ ஆதரவாளர்களிடையே  அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன.

இந்நிலையில், நேற்று (06 செப்டம்பர் 2012) அறிக்கை ஒன்றை வெளியிட்ட அன்னா ஹசாரே, அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தினை முன்னிலும் வேகமாக செயல்படுத்த, புதியதொரு திட்டம் கொண்டிருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார்.  அரசியல் கட்சி தொடங்கிடாமல், தேர்தலில் சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறாராம் அன்னா ஹசாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக