புதுடெல்லி:கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது. போராட்டத்திற்கு தலைமை தாங்கும் அரசு சாரா இயக்கங்களுக்கு தாராளமாக பணம் வருவதாக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ஆர்கனைஸரில்’ எழுதியுள்ள கட்டுரையில் இந்த குற்றச்சாட்டு
மில்லியன் கணக்கில் பணம் வரும் சில என்.ஜி.ஓக்கள் பிஷப்புகளுக்கு கீழ் இயங்குவதாகவும், போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் கிறிஸ்தவ சபைகளுக்கு அமெரிக்க ஆதரவளிப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடு குற்றம் சாட்டுகிறது.
ஐ.டி.ஆர்.எஃப் போன்ற அமைப்புகளின் மூலம் சமூக சேவை என்ற பெயரால் இந்தியாவில் வகுப்புவாதத்தை விதைக்க கோடிக்கணக்கான பணம் வெளிநாடுகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வரும் சூழலில் ஆர்.எஸ்.எஸ் ஏட்டின் குற்றச்சாட்டு கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக