வியாழன், செப்டம்பர் 06, 2012

தென்சீனக் கடல் பிரச்சனையில் அமெரிக்கா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். சீன ஊடகங்கள் காட்டம் !

சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள தென் சீனக் கடலில் நான்கு ஆசியான் நாடுகளுடன் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் இப்பிரச்சினை குறித்து இந்தோனேசியா நாட்டுடன் பேச்சு நடத்தினார். அப்போது இப்பிராந்திய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள விதத்தில் தீர்வு காண ஆசியான் அமைப்பு நாடுகள் முயல வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
 
பின்னர், இரண்டு நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் சீனா வந்துள்ளார். அவருடன் சிரியா, ஈரான் மற்றும் வட கொரியா நாடுகளின் பிரச்சினை குறித்து சீனா அதிகாரிகள் பேசக்கூடும் என்று கூறப்படுகிறது. முன்பு இப்பிராந்திய பிரச்சனை குறித்து அமைதி வளர்ச்சியில் அமெரிக்கா  நடுநிலையுடன் செயல்படும் என அறிவித்தபடி நடந்துகொள்ளும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்ததுள்ளது.
 
பிறகு அவர் கிழக்கு திமோர் மற்றும் ப்ருனெய் நாடுகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.  ஹில்லாரி கிளின்டனின் வருகையை சீனா ஊடகங்கள் விமர்சித்து எழுதியுள்ளன. அதில் இப்பிராந்திய பிரச்சினையில் அமெரிக்கா அத்துமீறி வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அங்குள்ள ஊடகங்கள் விமர்சித்து உள்ளன.
 
தென் சீனக்கடல் பிராந்தியத்தில் தாங்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. பன்னாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இப்பிராந்திய வளர்ச்சி மற்றும் அமைதிக்காக அமெரிக்கா செயல்படும் என்று ஹில்லாரி கிளின்டன் முன்பே கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக