தென் அமெரிக்க நாடான வெனிசுவேலா நாட்டின் காட்டுப்பகுதியில் யனோமாமி என்னும் காட்டுவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சட்டவிரோதமாக தங்கத்தை திருடன் கும்பல் ஒன்று ஹெலிகோப்டேரில் ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளில் போய் இறங்கியிருக்கிறது. பின்னர் அவர்களுக்கு இடையூறாக இருந்த ஆதிவாசி மக்களின் குடிசைகளை எரித்து கொளுத்தியிருக்கின்றனர். அதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 80 பேர் இறந்துள்ளனர்.
சமீபத்தில் ஆதிவாசிகள் பற்றி கணக்கெடுக்க சென்ற அதிகாரிகளுக்கு இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து எந்த தடயங்களும் எங்களுக்கு சிக்க வில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இது போன்ற சட்டவிரோத கும்பலால் தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி வரும் அந்த ஆதிவாசி மக்களின் குற்றச்சாட்டை அரசு கண்டுகொள்வதில்லை என்று அப்பகுதி மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக