எகிப்தின் முன்னாள் பிரதமர் அகமது நஜீஃபுக்கு வியாழக்கிழமை 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனையுடன் 9 மில்லியன் எகிப்து பவுண்டுகளை அபராதமாகக் கட்ட வேண்டுமென்றும் கெய்ரோ விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டின்கீழ் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.2004 முதல் 2011-ம் ஆண்டுவரை எகிப்தின் பிரதமராக அகமது நஜீஃப் இருந்தார். ஒரு வர்த்தக நடவடிக்கையில் சட்டத்துக்குப்
புறம்பான விதத்தில் பலன் அடைந்ததாக அவர் மீது கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் மீது 2011 ஜனவரியில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இப்போது நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக