மதுரை ஆதீனத்துடன் அவர் நேற்று அளித்த பேட்டியில், ஆதீன மடத்தில் இருப்பவர்களைப் பற்றி அவதூறு பரப்பி வருவோர் குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர், ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளோம். நான் என்னை திருநங்கை எனக் குறிப்பிடவில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும் அப்பாற்பட்டு அர்த்தநாரீஸ்வரர்போல இருப்பதையே குறிப்பிட்டேன். ஆனால், மீட்புக் குழுவினர் திருநங்கைகள் மடத்திற்குள் வரக்கூடாது என்பதைப்போல தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
திருநங்கைகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பாலினத்தை தேர்ந்தெடுக்கலாம் என அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஆகவே, திருநங்கைகள் குறித்து மீட்புக் குழுவினர் கூறியதைக் கண்டிக்கும் வகையில் வழக்குத் தொடரப்படும். மதுரை ஆதீன மடத்தில் திருநங்கைகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக