புதுடெல்லி:’2ஜி அலைக்கற்றை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ராசாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என்று ஜனதா கட்சியின் தலைவரும், இந்த வழக்கின் முக்கிய மனுதாரருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இதுக்குறித்து சுப்ரமணிய சுவாமி கூறியது: ‘ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த செய்தி எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.
கடந்த 15 மாதங்களாகச் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். வழக்கின் இறுதியில் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும்.
கடந்த 15 மாதங்களாகச் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். வழக்கின் இறுதியில் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும்.
இந்த வழக்கின் விசாரணை உச்ச கட்டத்தில் உள்ளது. ராசாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர் வாயைத் திறந்தால், யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படுமோ அவர்கள் மூலம் ராசாவுக்கு ஆபத்து நேரிடலாம். ஆகையால், அவருக்கு எப்போதும் குறைந்தது மூன்று போலீசார் – காவல் உதவி ஆய்வாளர்கள் அளவில் – பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர் சென்னைக்குச் சென்றாலும் பாதுகாப்பு தேவை. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.
ராசா வெளிவந்துள்ளதால் வழக்கின் விசாரணைக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதில் எந்த திருத்தமும் செய்ய முடியாது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் தண்டனை பெற்றுத்தரும் வரையில் எனது நீதிமன்றப் போராட்டம் தொடரும்’ என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக