நித்யானந்தாவை எதிர்ப்பவர்கள் இந்து மத விரோதிகளே என்று அகில பாரத இந்து மகா சபா கூறியுள்ளது.மதுரை சைவ மடத்தின் இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவிற்கு இந்துமகாசபா நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. நித்யானந்தாவால் தான் இந்துக்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள் என்றும் உலகெங்கும் இந்துமதத்தைப் பரப்பிவரும் நித்யானந்தாவை எதிர்ப்பவர்கள் இந்துமத விரோதிகள் என்றும் அகிலபாரத இந்துமகாசபா நிர்வாகிகள் கருத்தளித்துள்ளனர்.அகில பாரத இந்து மகா
சபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், பொதுச் செயலாளர் இந்திரா திவாரி, தமிழ் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் இன்று மதுரை வந்து மதுரை ஆதினம் அருணகிரிநாதரையும் இளைய ஆதினம் நித்தியானந்தாவையும் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் இந்துமகாசபா குழுவினர் பேசுகையில் ,"இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்து மதத்தை நல்ல முறையில் நித்யானந்தா சுவாமிகள் பரப்பி வருகிறார். இந்து மதம் தழைத்தோங்க பல்வேறு முயற்சிகளும் எடுத்து வருகிறார். உலகில் அனைத்து இந்துக்களும் அவரால் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்.
நித்யானந்தரின் தொண்டு தொடர எங்கள் அமைப்பு முழு ஆதரவு கொடுக்கும். நித்யானந்தர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் சிறு சிறு பிரச்சனைகள்தான். அவருக்கு உள்ள சக்தியில் இதெல்லாம் சாதாரண விஷயம்.
நித்யானந்தா நீடூழி வாழ்ந்து இந்து மதத்திற்கு இன்னமும் பல சாதனைகள் புரிய வேண்டும் பிரார்த்திக்கிறோம். இந்து மதத்தைப் பொறுத்தவரை யாராவது ஒருவர் நல்ல காரியம் செய்தால் சிலர் எதிர்ப்பது வாடிக்கைதான். அதுபோல நித்யானந்தரின் நடவடிக்கைகளை அவர் இந்து மதத்திற்கு ஆற்றி வரும் தொண்டுகளைப் பொறுக்க முடியாத சிலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் இந்து மத விரோதிகள்.
மதுரை ஆதீனத்தை பிரச்சனையாக்க முயற்சிக்கும் மற்ற ஆதீனங்களின் செயல்களை வண்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களை இந்து மத விரோதிகளாக நாங்கள் பார்க்கிறோம்
என்று கூறினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக