வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் w புஷ் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் பிரபல அமெரிக்க சிந்தனையாளரும், எழுத்தாளருமான நோம் சோம்ஸ்கி. ஆஃப்கானிஸ்தானிலும், யெமனிலும் அமெரிக்க ட்ரோன்(ஆளில்லா விமானம்) தாக்குதல்களை கடுமையாக கண்டித்த சோம்ஸ்கி, புஷ் அரசு நிரபராதிகளை சித்திரவதைச் செய்து கடத்திய பொழுது, ஒபாமா மக்களை கொன்றொழித்து வருகிறார் என குற்றம் சாட்டுகிறார்.
புஷ்ஷிற்கு எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் கடத்திச்சென்று சிறைக்கூடங்களில் வைத்து சித்திரவதைச் செய்வார். ஒபாமாவோ, ஆட்களை கொலைச் செய்வதால் சிறைக்கூடங்களுக்கு தேவையில்லை. என்று சோம்ஸ்கி ஒரு நேர்முகத்தில் கோபத்துடன் கூறினார்.
அமெரிக்க அறிஞர் அன்வர் அல் அவ்லாகியின் யெமனில் வைத்து கொலைச் செய்ததை சோம்ஸ்கி வன்மையாக கண்டித்தார். யெமனில் அல்காயிதாவின் நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவ்லாகியை கொலைச் செய்தது தவறு என கூறிய சோம்ஸ்கி, இச்செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட ரீதியையும் கண்டித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக