வியாழன், மே 17, 2012

சிரியாவில் 15 சிவிலியன்கள் படுகொலை: ராணுவம் அட்டூழியம்!

பெய்ரூத்:வடக்கு சிரியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் 21 க்கும் மேற்பட்ட மக்கள் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு ஸம்மாஸ் நகரில் 15 சிவிலியன்களை ராணுவம் கொலைச் செய்துள்ளது.
ஐ.நா கண்காணிப்புக் குழுவைச் சார்ந்த 4 பேர் எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பில் உள்ளனர்.
தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட ராய்ட்டர் செய்தி நிறுவன பிரதிநிதிகளிடம், தாங்கள் சிறைவைக்கப்படவில்லை என்றும், ஃப்ரீ சிரியா ஆர்மியின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘ஐ.நா கண்காணிப்பாளர்கள் தற்பொழுது ஃப்ரீ சிரியா ஆர்மியின் பாதுகாப்பில் உள்ளனர். ராணுவம் நடத்திய ஒரு குற்றச்செயலை அவர்கள் நேரடியாக கண்டதால், வெளியே வந்தால் அவர்களை ராணுவம் கொலைச் செய்துவிடும்’ என்று ஃப்ரீ சிரியா ஆர்மியின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஐ.நா கண்காணிப்பாளர்கள் பயணித்த ட்ரக், தாக்குதலில் சேதமடைந்தது. இத்லிப் நகரத்தில் கான் சைக்கூன் நகரத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஐ.நா கண்காணிப்பாளர்களின் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக