ஞாயிறு, மே 06, 2012

குடியரசு தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு கருணாநிதி ஆதரவு, முடிவு எடுக்காத ஜெ.!

சென்னை:குடியரசு தலைவர் தேர்தலில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை என்று தி.மு.க தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பதிலளிக்கையில் கருணாநிதி இதனை தெரிவித்தார்.

இதுத்தொடர்பான கேள்விக்கு கருணாநிதி அளித்த பதிலில்,’பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவர் ஆவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அவரை 1969-ம் ஆண்டிலேயே சென்னைக்கு அழைத்து வந்து மாநில சுயாட்சி மாநாடு நடத்தியவன் நான். அவர்தான் வேட்பாளர் என்றால் திமுக அதை ஆதரிக்கத் தயங்காது.’ என்றார்.
அதேவேளையில், தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க தலைவருமான ஜெயலலிதா டெல்லியில் இதுக்குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ’குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக யாரும் தம்மிடம் பேசவில்லை. இந்த விஷயத்தில் அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக