கோழிக்கோடு:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்று ரெவலூசனரி கம்யூனிஸ்ட்(புரட்சிகர கம்யூனிஸ்ட்) இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்த டி.பி.சந்திரசேகரன் என்பவர் நேற்று கொடூரமாக கொலைச் செய்யப்பட்டார். கேரள மாநிலத்தை நடுங்கச்செய்த இக்கொடூரக் கொலையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில செயலாளர் டி.கெ.அப்துஸ் ஸமத் கடுமையாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியல் எதிரிகளை உடல்ரீதியாக அழித்தொழிக்கும் கொடூர முகம் இதன் மூலம் வெளியாகியுள்ளது. ஒரு மாநில தலைவரையே கொலைச் செய்யும் அளவுக்கு துணிந்துள்ள வன்முறையாளர்கள் அனைத்து சமூக மரியாதைகளையும் தகர்த்து எறிந்துள்ளனர்.
சந்திரசேகரனின் முகத்தைக் கூட வெட்டி கோரமாக்கியதை பார்க்கும் பொழுது அவர்களின் கொடூர மனோநிலையை புரிந்துகொள்ளலாம். ஒரு தலைவரை கொலைச்செய்து அவர் சார்ந்த கொள்கையை அழித்துவிடலாம் என்பது சிலரின் மோகமாகும்.
மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பு(எஸ்.எஃப்.ஐ) மற்றும் இளைஞர் அமைப்பு(டி.ஒய்.எஃப்.ஐ) ஆகியவற்றில் பொறுப்பு வகித்த சந்திரசேகரனை கொலைச்செய்ய நடந்த சதித்திட்டத்தில் உயர்மட்ட பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.
கொலையாளிகளை கண்டுபிடித்து முன்மாதிரியாக தண்டிக்க அரசு தயாராகவேண்டும் என்று அப்துஸ்ஸமத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக