முன்னதாக, ஒடிசா மாநில எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா கடத்தப்பட்டு 1 மாதம் மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்தார். இவரை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் இருக்கும் 29 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இவர்களில் 25 பேரை விடுவிக்க மாநில அரசு சம்மதித்தது. இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. விடுவிக்கப்பட்டார்.
பின்னர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார். அரசிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது. பின்னர் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் 13 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக