விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி காராய் ராஜன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோருக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், சி.பி.ஐ அதிகாரிகளுக்கு முன்னால் ஆஜரானால் கைது செய்யப்படுவோம் என அஞ்சி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
சி.பி.எம் கட்சியை விட்டு விலகிய ஃபஸலின் பணிகள் உள்ளூரில் சி.பி.எம்மின் வளர்ச்சியை பாதித்ததாகவும் இதற்கு பழிவாங்கும் நடவடிக்கைதான் ஃபஸலை கொலைச்செய்ய தூண்டியது என்றும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணையில் கண்டறிந்த தகவல்களை சி.பி.ஐ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். பின்னர் முன் ஜாமீன் மனுவின் விசாரணை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2006-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி தலச்சேரியில் வைத்து அதிகாலையில் முஹம்மது ஃபஸல் படுகொலைச் செய்யப்பட்டார். விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து ஃபஸலின் மனைவி அளித்த மனுவைத் தொடர்ந்து 2008 மார்ச் 11-ஆம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
2008 ஏப்ரல் ஐந்தாம் தேதி சி.பி.ஐயின் சென்னை யூனிட் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
என்.டி.எஃப் உறுப்பினரும், தேஜஸ் பத்திரிகையின் ஏஜண்டுமான ஃபஸல் முன்பு சி.பி.எம் உறுப்பினர் ஆவார். சி.பி.எம்மை விட்டு விலகிய ஃபஸல், என்.டி.எஃபில் சேர்ந்து தேஜஸ் பத்திரிகைக்கு சந்தாதாரர்களையும், என்.டி.எஃபில் உறுப்பினர்களையும் சேர்த்தார். இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்வே குற்றவாளிகள் ஃபஸலை கொலைச் செய்ய தீர்மானித்தார்கள் என்று சி.பி.ஐ வழக்கறிஞர் பி.சந்திரசேகரன் பிள்ளை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக