சனி, மே 12, 2012

‘பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு:மறப்பதும்! நினைவுக் கூறுவதும்!’ நூல் வெளியீடு!

திருவனந்தபுரம்:மறக்க முடியாத சம்பவமாக என்றென்றும் நினைவுக் கூறப்பட வேண்டிய கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பீமா பள்ளியில் நடந்த கொடூரமான போலீஸ் துப்பாக்கிச்சூட்டை மறக்கடிப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக பிரபல எழுத்தாளர் டி.ஜமால் முஹம்மது கூறினார். தேஜஸ் பப்ளிகேசன்ஸ் சார்பாக  ‘பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு:மறப்பதும்! நினைவுக் கூறுவதும்!’ என்ற நூலை வெளியிட்டு அவர் உரைநிகழ்த்தினார்.
விடுதலைப் போராட்ட காலத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடுகள் கூட தற்பொழுதும் அரசியல் மேடைகளில் நினைவுக் கூறப்படும் பொழுது கொடூரமாக நடத்தப்பட்ட பீமாப் பள்ளி துப்பாக்கிச்சூடு விவாதிக்கப்படாமல் இருப்பது துக்ககரமானது என்று ஜமால் முஹம்மது தெரிவித்தார்.

பீமாப் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் கொலைச் செய்யப்பட்ட ஹக்கீமின் தந்தை முஹம்மது மஹதிக்கு நூலின் முதல் பிரதி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு என்.சி.ஹெச்.ஆர்.ஒ மாநில நிர்வாக குழு உறுப்பினர் எ.இப்ராஹீம் குட்டி தலைமை வகித்தார். தேஜஸ் பப்ளிகேசன்ஸ் எடிட்டர் டி.வி.ஹமீத் நூலை அறிமுகப்படுத்தினார்.
எழுத்தாளர் எம்.எம்.கான், கெ.எம்.ஒய்.எஃப் மாநில பொதுச் செயலாளர் கடைக்கல் ஜுனைத், என்.சி.ஹெச்.ஆர்.ஒ தேசிய செயலாளர் ரெனி ஐலின், கேரள பல்கலைக்கழக அரபி மொழித்துறை தலைவர் டாக்டர்.நிஸார், பீமாப் பள்ளி ஜமாஅத் முன்னாள் தலைவர் அஸீஸ், டி.இஸ்ஹாக், தேஜஸ் பப்ளிகேசன்ஸ் மேலாளர் அப்துல் அஹத், ஸலீம் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக