எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஷரமுல் ஷேக்கில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள இ.அஹ்மத், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலேஹியுடன் நடத்திய சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியது: எரி சக்தி துறையில் ஈரானுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவுன் பயன் தரத்தக்கது. இரு நாடுகளின் விருப்பங்களுக்கு இது உபயோகமானது. ஈரானுடன் இந்தியாவின் கலாச்சார உறவை சுட்டிக்காட்டிய இ அஹ்மத் காலச்சார, பொருளாதார, எரிசக்தி, வர்த்தக துறையில் ஈரானுடன் ஒத்துழைத்து முன்னேற உறுதிப்பூண்டுள்ளதாக தெரிவித்தார்.
சந்திப்பின் போது இ.அஹ்மதும், ஸலேஹியும் பிராந்தியத்தில் அரசியல் சூழல்கள் குறித்து சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர். இந்தியா உடனான உறவு சரியான திசையில் செல்வதாக ஸலேஹி கூறினார். பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையே உருவாக்கும் ஒருங்கிணைந்த கமிஷன் அமலுக்கு வரும்பொழுது இது சாத்தியமாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஸலேஹி.
இரண்டு தின சுற்றுப் பயணத்தின் போது இ.அஹ்மத், எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக