புதன், மே 02, 2012

காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்த மோடி போலீஸ்!

Congress MP breaks down in parliament saying police assaulted her in Gujaratடெல்லி:குஜராத் மாநிலத்தை ஆளும் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் போலீஸ் காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்துள்ளது. இதுத்தொடர்பான புகாரை மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி பிரபாபென் டேவியாட் கண்ணீர் விட்டு அழுது கூறினார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான முஸ்லிம் இனப்படுகொலைகள் நிகழ்ந்தன.மோடியின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கோரத்தாண்டவத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு மோடி தனது இமேஜை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடகங்களை ஆடி வருகிறார். ஆனாலும், அவ்வப்போது அவரது உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
குஜராத் மாநிலம் உருவான 52-வது நாள் நேற்று பழங்குடிகள் அதிகம் வசிக்கும் டகோட் மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி பிரபாபென் டேவியாட், 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் இதைத் தடுத்த போலீசார் பிரபாபென், 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இன்று இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எம்.பி. பிரபாபென் எழுப்பினார். அப்போது தம்மை போலீசார் தான் உள்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் துன்புறுத்தியதாகவும் தமது இரண்டு கைகளில் இருக்கும் காயத்தையும் கண்ணீரோடு அவர் கூறினார். அவருக்கு ஆதரவாக காங்கிரசின் கிரிஜா வியாஸ் எழுந்து குரல் கொடுத்தார்.
இதையடுத்து எழுந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில அரசுடன் பேசுவதாக உறுதியளித்தார்.
அதேசமயம், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக