புதுடெல்லி:பாத்ரிபால் போலி என்கவுண்டர் சம்பவத்தில் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராணுவ அதிகாரிகளை ராணுவ நீதிமன்றம்(கோர்ட் மார்ஷல்) விசாரணை நடத்தவேண்டுமா? அல்லது குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டுமா? என்பது குறித்து தீர்மானிக்க ராணுவத்திற்கு உச்சநீதிமன்றம் எட்டு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
சாதாரண நீதிமன்றத்தில் ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை. கோர்ட் மார்ஷல் ராணுவத்திற்கு அனுகூலம் இல்லையெனில் விசாரணைக்கு நான்கு வாரத்திற்குள் மத்திய அரசின் அனுமதியை பெறவேண்டும் என்று இவ்வழக்கி விசாரணை நடத்திய சி.பி.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கஷ்மீர் மாநிலம் பாத்ரிபாலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து பேர் கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் நிகழ்ந்தது. 200௦ ஆம் ஆண்டு மார்ச் மாதம் 35 பேர் கொலைச் செய்யப்பட்டனர். சிறிது நாட்கள் கழித்து அப்பாவிகளான எட்டு நபர்களை கொலைச்செய்து விட்டு ராணுவம் என்கவுண்டர் என்று நாடகமாடியது.
ராணுவத்தின் அநியாய நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் கொலைச் செய்யப்பட்டது அப்பாவிகளான சாதாரண மக்கள் என்ற உண்மை தெரியவந்தது.
போலி என்கவுண்டரில் ராணுவத்தினர் அப்பாவிகளை கொலைச் செய்ததாக சி.பி.ஐ வாதிட்டது. ஆனால், கொலைச் செய்யப்பட்டது வெளிநாட்டு தீவிரவாதிகள் என்றும், போலீஸ் அளித்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் என்கவுண்டர் நடந்ததாக ராணுவம் கூறியது. கஷ்மீர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கின் விசாரணையை 2007-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக