புதன், மே 16, 2012

பிலிப்பைன்ஸ் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு. 10 பேர் படுகாயம்

 பிலிப்பின்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் மினி பஸ் ஒன்று 150 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.
மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த பஸ்ஸில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தனர். உள்ளே இடம் இல்லாத நிலையில் பஸ்ஸின் மேற்கூரை மீது பயணிகள் அமர்ந்து பயணம் செய்தனர். இதனால் பஸ் திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக மாகாண காவல்துறை தலைமை அதிகாரி வில்லியம் பெகுனோ தெரிவித்தார்.

 ஜீப்பில் சிறு மாற்றங்கள் செய்து அதை மினி பஸ்ஸôகப் பயன்படுத்தும் போக்கு மணிலாவில் அதிகம். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இத்தகைய ஜீப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 30 பேர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. இந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினாரா என்ற விவரம் தெரியவில்லை. பிலிப்பின்ஸ் நாட்டில் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமே வாகனங்கள் போதிய அளவில் பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான். இது தவிர சாலைகளும் மிக மோசமாக உள்ளன. இங்குள்ள டிரைவர்கள் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக சாலை விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதில்லை என்பதும் முக்கியக் காரணமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக