செவ்வாய், மே 15, 2012

டாக்டர் கலீல் ஜிஸ்தி பாகிஸ்தான் திரும்புகிறார்!

அஜ்மீர்:கொலை வழக்கில் இருபது ஆண்டுகள் சிறையில் கழித்த பிரபல பாகிஸ்தான் வைராலஜிஸ்ட் டாக்டர்.கலீல் ஜிஸ்தி இன்று தனது சொந்த நாட்டிற்கு திரும்புகிறார்.
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தான் செல்கிறார்.
நேற்று அஜ்மீரில் இருந்து தனது சகோதரர் ஜமீல் ஜிஸ்தியுடன் புதுடெல்லிக்கு ரெயில் மூலம் வந்த 82 வயதான ஜிஸ்தி பாகிஸ்தான் ஹைக்கமிஷனுக்கு சென்று தூதரக நடவடிக்கைகளை பூர்த்திச் செய்த பிறகு பாகிஸ்தான் செல்கிறார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜிஸ்தி பாகிஸ்தான் சென்றால், அங்குள்ள இந்திய ஹைக்கமிஷனிடம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவேண்டும். நவம்பர் 1-ஆம் தேதி அவர் இந்தியாவுக்கு திரும்பவேண்டும். கடந்த மே 10-ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் ஜிஸ்தி பாகிஸ்தான் செல்ல அனுமதி வழங்கியது.
1992-ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயாரை காண அஜ்மீர் வந்த ஜிஸ்தி, உறவினருடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்படவே ஜிஸ்தி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜிஸ்திக்கு ஜாமீன் வழங்கியது. எனினும், சொந்த நாட்டிற்கு திரும்ப அவருக்கு அனுமதி வழங்கப்படாததால் அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக