சனி, ஏப்ரல் 06, 2013

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 26 பேர் சிறைபிடிப்பு !

  • காரைக்கால்: தமிழக, புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் மூன்றுக்கும் மேற்பட்ட முறை தமிழக, புதுவை மீனவர்களைத் தாக்கி காயப்படுத்திய இலங்கை கடற்படையினர் , தற்போது காரைக்காலில் இருந்து 5 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 26 மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். 
    தமிழக , புதுச்சேரி மீனவர்கள் மீதான இலங்கை கற்றபடையினரின் அத்துமீறிய தாக்குதல் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மீன் பிடித்தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரைக்கால் பட்டினச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகளில் காரைக்காலைச் சேர்ந்த 26 பேர் கடந்த 4 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர்.

    நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அவர்களது உறவினர்களுக்கு அளித்த தகவலின்பேரில், மீன் வளத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது 26 மீனவர்களைக் கைது செய்திருப்பது, காரைக்கால் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக