எகிப்து விமானத்தில் திடீரென பாம்பு நுழைந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.எகிப்து நாட்டின் கெய்ரோவிலிருந்து, குவைத் நோக்கி, விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த, பாம்பு வியாபாரி, எகிப்தில் வாங்கிய நாகப்பாம்பை, கள்ளத்தனமாக எடுத்து வந்தார். திடீரென இந்த பாம்பு, 48 வயதான
அந்த நபரை கடித்து விட்டது. இதனால், அவர் கையை உதறிய போது, அந்த பாம்பு அவரிடமிருந்து தப்பித்து, விமானத்தின் மற்ற இருக்கைகள் வழியாக சென்று விட்டது.இந்த பாம்பை அவர் பிடிக்க முயன்ற போது, விமான ஊழியர்கள் உஷாரடைந்து விட்டனர். ஆனால், பயணிகள் பீதியடைந்து அலறினர். இதையடுத்து, விமானம் உடனடியாக, அல் கர்தாகா நகரில் தரையிறக்கப் பட்டது.
விமானத்தில் சுற்றிக் கொண்டிருந்த பாம்பு பிடிக்கப்பட்டது. ஆனால், இந்த வியாபாரி, பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுவது மூடத்தனம் எனக் கூறி மருத்துவமனைக்கு வர மறுத்தார். ஆனால், பின்னர் கட்டாயப்படுத்தி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக