புதுடெல்லி:மின்சாரம் வாங்குவதிலும், அடிமாட்டு விலைக்கு அரசு நிலங்களை வழங்கியதிலும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி அடானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.தனியார் கம்பெனிக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு கிணறுகளை இலவசமாக மோடி வழங்கியுள்ளார். இது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரியது என்று அரவிந்த் கெஜ்ரிவால்
செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கிருஷ்ணா-கோதாவரி படுகையில் உள்ள குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான 20 சதவீதம் பங்குகளை 2 தனியார் நிறுவனங்களுக்கு நரேந்திர மோடி தானம் செய்துவிட்டார்.
குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் அருகிலுள்ள காந்தி நகர் பகுதியில், அம்மாநில அரசு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு வீடு கட்டிக்கொள்ள நிலம் ஒதுக்கீடு செய்தது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அந்த நிலங்களை மிக அதிக லாபத்திற்கு விற்று ஆதாயம் அடைந்துள்ளனர்.
இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் ஆதாயம் அடைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் குரல் எழுப்பவில்லை. இந்த கொள்ளையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
கட்சி பிராந்தியத்தில், அடானி குரூப் நிறுவனங்களுக்கு 14 ஆயிரத்து 306 ஏக்கர் நிலத்தை நரேந்திர மோடி, அடிமாட்டு விலைக்கு ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு தாராளமாக சலுகைகளை வாரி வழங்கிய நரேந்திர மோடியை நேர்மையாளராக முன்னிலைப்படுத்துவது தவறான செயலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக