லண்டன்: இங்கிலாந்தில் வாழும் இந்திய பெண்கள் வெளியே செல்லும்போது ஸ்கார்ப் அல்லது துப்பட்டாவால் தங்க நகைகளை மறைத்துக் கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் லெஸ்டரில் உள்ள கிழக்கு மிட்லேண்ட்ஸ் நகரில் இந்திய வம்சாவழியினர் அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள பெல்கிரேவ் ரோட்டில் ஏராளமான இந்திய வம்சாவழியினர் நகைக்கடைகள் வைத்துள்ளனர். அந்த கடைகளுக்கு ராஜஸ்தான் மற்றும்
குஜராத்தில் இருந்து நகைகள் செல்கின்றன.
தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டுள்ளதையடுத்து இந்திய வம்சாவழியினரின் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் தெருக்களில் செல்லும் இந்திய பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும் அதிக அளவில் நடக்கின்றன. இதையடுத்து தங்க நகைகள் அணிந்து வெளியே செல்லும் ஆசியர்கள் குறிப்பாக இந்திய பெண்கள் ஸ்கார்ப் அல்லது துணியால் தங்கள் நகைகளை மறைத்துக் கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். தெருவில் நடந்து செல்பவர்கள் அதிலும் குறிப்பாக பெண்களிடம் இருந்து தங்க செயின், பிரேஸ்லெட் மற்றும் சில நகைகள் பறித்துச் செல்லப்படுகிறது.
கடந்த மே மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை கோல்டன் மைல், பெல்கிரேவ் ரோடு மற்றும் மெல்டன் ரோடு பகுதிகளில் 17 நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக