
இதற்கிடையில் புனித வேதத்தை அவமதித்த தகவல் பல இடங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. கொந்தளித்துப் போன முஸ்லிம் இளைஞர்கள் மொபைல் ஃபோன் வழியாக அருகில் உள்ள கிராமங்களுக்கு தகவல் அனுப்பி மசூரி நகர் போலீஸ் ஸ்டேசன் முன்னால் திரளுமாறு அழைப்பு விடுத்தனர். மாலை 6 மணியளவில் மசூரி நகர் போலீஸ் ஸ்டேசன் முன்னால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டனர். போலீசாருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இச்சம்பவம் குறித்து வாக்குவாதம் நடந்தது. இதனிடையே கோபமடைந்த முஸ்லிம் இளைஞர்கள் வாகனங்களை தாக்கியுள்ளனர். சிலர் போலீஸ் மீது கல்வீசியுள்ளனர். ஆனால், இத்தகைய சூழலில் கூட்டத்தை கலைக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். தடியடி, வானை நோக்கி சுடுதல், கண்ணீர் புகை, தண்ணீர் பீச்சியடித்தல் என எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
காக்கிகளின் காவி வெறிக்கு சிறுவர்கள் உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர். அதிகாரப்பூர்வமற்ற தகவலின்படி 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கல்வீச்சில் போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உ.பி அரசு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் அதிரடிப்படையினர் ரோந்து வருகின்றனர்.
போலீசாரால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் அமீர் (16), வாஹித் (18), ஹயாத் (35), லுக்மான் (13), வாசிம் (18) மற்றும் ஆசிப் (18) ஆகியோர் ஆவர். 12 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார் கூறுகையில், “3 பேர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர். அதில் ஒருவர் சிறுவர். இவருக்கு காலில் குண்டு பாய்ந்தது. ஆனால் உரிய நேரத்தில் சிகிட்சை கிடைக்காததால் இறந்துள்ளார். 2 பேர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக