அந்தமான் நிகோபாரை சேர்ந்த ஜார்வா பழங்குடியின பெண் ஒருவர் மேலாடை இல்லாமல் நடனமாடும் வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது போன்று அந்தமான் பழங்குடியினரை தவறாக பயன்படுத்தினால் அவர்களுக்கு ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு இன்று அங்கீகரித்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள் நடைமுறை வரைமுறைகள் 2012 என்ற சட்டத்தை இன்று மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது 240 பிரிவின் கீழ் இச்சட்டத்தை கொண்டுவந்துள்ளதாகவும் இச்சட்டம் அந்தமான் நிகோபார் முழுவதிற்கும் பொருந்தும் என தெரிவித்தார்.
இச்சட்டத்தின் மூலம் அனுமதியில்லாமல் நுழைவது, புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, வேட்டையாடுவது, மது பானங்கள் அருந்துவது, எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்வது, நோய்கிருமிகளை பரப்புவது போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்பர் சோன் என்றழைக்கப்படும் பகுதிக்குள் விளம்பர படம் வைப்பதும் குற்றம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்பர் சோன் என்பது ஜார்வா பழங்குடியினர் வாழும் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதி ஆகும். இச்சட்டத்தை மீறுவோர் மீது 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கமுடியும், மேலும் ரூபாய் 10000 வரை அபராதமும் விதிக்க முடியும் என அம்பிகா சோனி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக