வெள்ளி, ஜூன் 01, 2012

நட்சத்திர ஓட்டலில் கூட்டம்,வெளிநாட்டு பயணத்திற்கு தடை.மத்திய அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கை !

No meeting in five star hotels. Pranab Mugarjeeநிதி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அரசுத் துறைகளில் பின்பற்ற வேண்டிய சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.201112ம் ஆண்டின் நிதி பற்றாக்குறை 5.7 சதவீதமாக இருந்தது. இதை குறைக்க சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநிலங்களவையில் நிதியமைச்சர்
பிரணாப் முகர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து அரசுத் துறைகளும் இந்த நிதியாண்டில் திட்டமில்லா செலவுகளை 10 சதவீதம் குறைக்கும்படி நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளும்படி எல்லா துறைகளுக்கும் நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ள விவரம் வருமாறு:

* அரசு துறைகளின் கூட்டத்தை ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்த கூடாது.
* அரசு துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க கூடாது.
* வெளிநாடு பயணம் செல்வதாக இருந்தால் குறைந்த நபர்களே சென்று, குறுகிய நாளில் பயணத்தை முடித்து கொள்ள வேண்டும்.
* அரசு துறை கண்காட்சிகள், கருத்தரங்கு, கூட்டங்களை வெளிநாடுகளில் நடத்த கூடாது.
* எந்த அரசு துறையிலும் புதிய பதவிகளை உருவாக்கக் கூடாது.
* சிக்கன நடவடிக்கைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சம்மந்தப்பட்ட துறை செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக