செவ்வாய், ஜூன் 12, 2012

ஏமன்: சிறப்பு பொருளாதார ஆலோசகராக மலேசிய முன்னாள் பிரதமருக்கு அழைப்பு !

Malaysia's former leader Mahathir was invited by Yemen for economic adviser.ஏமன் நாட்டின் சிறப்பு பொருளாதார ஆலோசகராகப் பதவியேற்க மலேசிய நாட்டு முன்னாள் பிரதமர் மஹாதிர் முகமதுவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு குறித்து ஏமன் நாட்டுப் பிரதமருடன் கலந்தாலோசிக்க, கடந்த வாரம் வியாழக்கிழமை அங்கு அவர் சென்றதாக ஏமனில் உள்ள மலேசியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.ஏமன் நாடு சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் முகமது சலீம் பùஸன்டோவாவுடன் கலந்தாலோசித்தார். இந்தச் சந்திப்பில் ஏமன் நாட்டு முன்னாள் பிரமதர், அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள்
மற்றும் உலக வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மஹாதிர் ஆட்சிக் காலத்தில் மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட பொருளாதார மாற்றங்கள் குறித்துப் பேசிய முகமது சலீம், "ஏமனிலும் சிறந்த பொருளாதர மாற்றங்களை அவர் கொண்டு வருவார் என்று நம்புகிறேன். இதற்கு மலேசியாவில் அமல்படுத்திய கொள்கைகள் மற்றும் அனுபவம் அவருக்குத் துணை புரியும்' என்று தெரிவித்தார்.

 "ஏமனின் சிறப்பு பொருளாதார ஆலோசகராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை மிகுந்த கெüரமாகக் கருதுகிறேன்' என்று மஹாதிர் தெரிவித்தார். மலேசியாவில் 22 ஆண்டுகளாகத் (1981-2003) தொடர்ந்து பிரதமராக இருந்த மஹாதிர் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் மாபெரும் பங்களிப்பை அளித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக