செவ்வாய், ஜூன் 12, 2012

சீனாவில் பயங்கர மழை. 3 லட்சம் பேர் வேறிடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர் !

Heavy rain in chinaசீனாவில் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஆறு பேர் பலியாகியுள்ளனர். மூன்று லட்சம் பேர் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் குய்ஷாய் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. ஆறு பேர் பலத்த மழைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், நான்கு நகரங்களில் மூன்றாயிரத்துக்கு அதிகமானவர்கள் வேறிடங்களில்
குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

விளை நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை மாகாணமான ஹுனானில் 19 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தின் காரணமாக 26 ஆயிரம் பேர் இந்த மாகாணத்தில் வெளியேறியுள்ளனர்.கடும் மழையினால் 3 லட்சத்து 68 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனிலும் மழை: பிரிட்டனின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், லண்டனின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 42 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த மழைக்கான எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக