சென்னை:ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹஸாரேயை சுற்றிலும் தேசவிரோதிகள் இருப்பதாகவும், அவர்கள்தாம் ஹஸாரேயை இயக்குவதாகவும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.ஹஸாரேக் குறித்து நாராயணசாமி கூறியது:ஹஸாரே ஒரு சாதாரண மனிதர்தான். ஆனால் இவரை சுற்றி தேச விரோத சக்திகள் கொண்ட சிலர் இயக்கி வருகின்றனர். இவர்கள் வெளிநாட்டு சக்திகளின் உந்து சக்தியால் இயக்கப்படுபவர்கள். அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி ஆகியோர் நிதி திரட்டி முறைகேடு
பேடி பல முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு செலவினங்களை அதிகரித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு இது போன்று எதுவும் நடக்கவில்லை. பிரதமர் நம்பிக்கையானவர். இந்திய அரசாங்கம் மிக நம்பிக்கையாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக