திங்கள், ஜூன் 11, 2012

அமெரிக்க மக்களிடம் செல்வாக்கு இழந்த முன்னாள் அதிபராக ஜார்ஜ் புஷ் தேர்வு !

George W. Bush still has negative ratingsசி.என்.என் நடத்திய ஆய்வில் ஜார்ஜ் புஷ் அமெரிக்க மக்களால் விரும்பப்படாத அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூலை 6, 1946 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2001 முதல் 2009 வரை அமெரிக்காவின் 43 வது அதிபராக இருந்தவர்.சி.என்.என் நடத்திய வாக்கெடுப்பில் வெறும் 43 சதவிகிதம் மக்கள் புஷ்ஷின் மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர். ஆனால் அதிகபடியாக 54
சதவிகிதம் அமெரிக்க மக்கள் புஷ்ஷுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவின் மூன்றில்  இரண்டு  பகுதி மக்கள் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மீது நேர்மறையான பார்வை  கொண்டுள்ளனர் என்று தி ஹஃப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையை மேற்கோள்காட்டி டெய்லி மெயில்  தகவல் வெளியிட்டுள்ளது.
புஷ்ஷை மக்கள் வெறுப்பதற்கு ஈராக் உடன் போர் தொடுத்தது, உலக பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஆங்கில மொழி மீது பிடிமானம் இன்மை போன்ற காரணங்களாக இருக்கலாம் என்று டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தற்போதைய மற்றும் முன்னாள் அதிபர்களில் ஜிம்மி கார்ட்டர் 54 சதவீதமும் புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் H .W. புஷ் 59 சதவீதமும்  மக்களால் விரும்பப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக