திங்கள், ஜூன் 11, 2012

சிறையில் முஸ்லிம் இளைஞர் கொலை: நீதிமன்றம் செல்லும் உறவினர்கள் !

முஹம்மது கத்தீல் சித்தீகிபுதுடெல்லி:பெங்களூர், புனே குண்டுவெடிப்புகளில் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஹம்மது கத்தீல் சித்தீகி கடந்த வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்பு மிகுந்த சிறை அறைக்குள் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்யப்பட்டார். இக்கொலைக்கு சக கைதிகள்தாம் காரணம் என போலீஸ் கூறுகிறது. ஆனால், பலத்த பாதுகாப்பு மிகுந்த சிறை அறைக்குள் எவ்வாறு இதர கைதிகள் நுழைந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது.

போலீசாரின் கூற்று மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் அவரது குடும்பத்தினர் கத்தீலின் படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளனர். கத்தீலின் குடும்பத்தினர் சார்பாக தான் மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று அவரது வழக்கறிஞர் எம்.எஸ்.கான் தெரிவித்துள்ளார்.
மஹராஷ்ட்ரா அரசு கத்தீல் சித்தீகியின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்ட போதிலும் இச்சம்பவத்தில் கள்ளத்தனம் குறித்து சந்தேகிப்பதாக கான் கூறினார். கத்தீலின் கொலை தொடர்பாக புனே ஏ.டி.எஸ்ஸில் இருந்து அறிக்கை பெறுவதற்கு உத்தரவிடக்கோரி திங்கள்கிழமை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை கான் தாக்கல் செய்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக