ஹைதராபாத்:சுரங்கத் தொழிலில் கொடிக்கட்டி பறக்கும் கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன ரெட்டிக்கும் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஜாமீன் வழங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி டி.வி.சலபதி ராவ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி டி.பட்டாபிராம ராவின் மகன் ரவி சந்திரா ஆகியோர் ஊழல் தடுப்பு பிரிவால்(ஏ.சி.பி) கைது செய்யப்பட்டுள்ளனர்.பட்டாபிராம ராவ், சலபதி ராவ், அவருடைய உறவினர் பி.ஸ்ரீனிவாஸ் ராவ், மூத்த வழக்கறிஞர்
இ.உமாமகேஷ்வர் ராவ் ஆகியோரின் வீடுகளில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர். சலபதி ராவ் மற்றும் ரவிசந்திராவை கைது செய்யும் முன்பு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இவர்களின் வீடுகளில் நடத்திய ரெய்டில் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பட்டாபிராம ராவ் மற்றும் இதர ஏழு நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ நீதிமன்றத்தில் கூடுதல் சிறப்பு நீதிபதியாக பதவி வகித்த பட்டாபிராம ராவ், சட்டவிரோத சுரங்கத்தொழில் வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியுள்ளார். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒய்.ஸ்ரீலட்சுமிக்கு ஜாமீன் மறுத்துள்ளார்.
பணம் வாங்கிக்கொண்டு ரெட்டிக்கு ஜாமீன் வழங்கினார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பட்டாபி ராமராவை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்தது. இவ்வழக்கு தொடர்பாக 1.60 கோடி ரூபாயை சி.பி.ஐ கைப்பற்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக