ஓஸ்லோ:21 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை இறுதியில் ஜனநாயக போராட்டத்தின் வீரங்கனையான ஆங் சான் சூசி பெற்றுக்கொண்டார்.நார்வே தலைநகரான ஓஸ்லோவில் நடந்த வர்ணமயமான நிகழ்ச்சியில் 1991-ஆம் ஆண்டு கிடைத்த நோபல் பரிசை ஆங் சான் சூசி பெற்றுக்கொண்டார்.ராணுவ ஆட்சியின் கீழ் 15 ஆண்டுகளுக்கு அதிகமாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சூசி பின்னர் விடுதலைச்
செய்யப்பட்டார். தற்பொழுது ஜனநாயக நடைமுறையை மியான்மரில் பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சூசி, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது நார்வேக்கு வருகை தந்து அதிகாரப்பூர்வமாக நோபல் பரிசை பெற்றுக்கொண்டார்.
மியான்மருக்கு வெளியே சுற்றுப்பயணம் செய்தால் ராணுவ அரசு மீண்டும் மியான்மரில் நுழைவதை தடுத்துவிடும் என்ற அச்சத்தால் வெளிநாட்டு பயணத்திற்கு சூசி தயாராகாமல் இருந்ததால் நோபல் பரிசை பெற இவ்வளவு காலம் தாமதமாகியுள்ளது. விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு சூசி ஏற்புரை வழங்கினார்.
அப்பொழுது அவர் கூறியது: “நோபல் பரிசுக் குழு சமாதானத்துக்கான பரிசை எனக்கு வழங்கியதன் மூலம், அடக்குமுறைக்கு உள்ளான, தனிமைப்படுத்தப்பட்ட பர்மாவும் உலகின் ஒரு பகுதி என்பதை அதன் மூலம் அங்கீகரித்திருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்ற கொள்கையை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆகவே என்னைப் பொறுத்தவரை, ஒரு நோபல் பரிசை பெறுவது என்பது, ஜனநாயகத்த்தின் மீதான மற்றும் மனித உரிமைகள் மீதான எனது கரிசனைகளை நாடுகளின் எல்லைகளைக் கடந்து விஸ்தரிப்பது என்று பொருளாகும். எனது இதயத்தில் இந்த நோபல் பரிசு ஒரு வாசலைத் திறந்திருக்கிறது” என்றார் ஆங்சான் சூ சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக