
இதனைத் தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் தலைமை பொறுப்பு வகித்த ராஸ் பிஹாரி பஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மேலும் அங்கு பணியாற்றிய மற்ற காவலர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதகவும் பாட்னாவின் மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் அம்ரித் ராஜ் தெரிவித்துள்ளார்.
சல்மானை நீதிமன்றக் காவலில் வைத்த பின்பு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் சல்மானின் உடல் நிலை மோசமடைந்த நிலையிலும் அதிகாரிகள் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாத காரணத்தால் தான் அவர் மரணமடைய நேரிட்டதாக அவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக