யங்கூன்:மேற்கு மியான்மரில் ராக்கேனில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய வகுப்புவாத கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.பெரும்பான்மை மக்களான ராக்கேன் பெளத்தர்களுக்கும், சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே உருவான கலவரத்தில் 2230 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கலவரத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேசுக்கு புலன்
பெயர்ந்துள்ளனர்.
இவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுக்கும் பங்களாதேஷ் அதிகாரிகளின் மனிதநேயமற்ற செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது. கலவரத்தைத் தொடர்ந்து இரு சமூகத்தையும் சார்ந்த 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறியவர்கள் என்று ராக்கேன் பெளத்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் இரு பிரிவினர் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது.
இந்நிலையில் புத்த மதத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் முஸ்லிம்கள் மீது பழிபோடப்பட்டும் 10 முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கலவரம் தீவிரமடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக