காஸா: புதன்கிழமை (06/06/2012) காலை ரஃபா கடற்பரப்பில் இருந்த மீன்பிடிப் படகுகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் திடீரென சுற்றிவளைத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவித்த பலஸ்தீன மீன்பிடித்துறை அமைச்சகம், "பலஸ்தீன மீனவப் படகுகளைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படை, மூன்று பலஸ்தீன மீனவர்களைக் கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் இருவர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களாவர்" என்று
குறிப்பிட்டுள்ளது."தம்முடைய அன்றாட வாழ்வாதாரத்துக்காகக் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் ஏழை மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் ஆள்கடத்தல் சம்பவங்களின் மூலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மிகத் தெளிவான மனித உரிமை மீறலை நிகழ்த்தியுள்ளது. இது நிச்சயமாக கண்டிக்கப்படத்தக்க அடாவடி நடவடிக்கையாகும்" என அமைச்சகம் வன்மையாய் சாடியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக