கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஃபுகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்தால் அந்நாட்டில் அணுமின் நிலையங்களுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். ஃபுகுஷிமா பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கதிர்வீச்சு பரவியதால் அங்கு விளையும் உணவுப் பொருட்களையும் குடிநீரையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஜப்பானில் ஒவ்வொரு அணுஉலையாக மூடப்பட்டது.
ஜப்பானில் உள்ள அனைத்து அணுஉலைகளின் செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதன்முறை.
கடைசி அணுஉலையும் மூடப்பட்டதையடுத்து டோக்கியோ நகரில் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். இதில், சுமார் 6 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஜப்பானில் மொத்தம் 58 அணுஉலைகள் உள்ளன.
பராமரிப்புக்காக அணுஉலைகள் மூடப்பட்டுள்ளது என்று காரணம் தெரிவிக்கப்பட்டாலும், மூடப்பட்ட அணுஉலைகள் மீண்டும் திறக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக