கெய்ரோ:ராணுவத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல் நடந்துகொண்டிருக்கும் வேளையில் கெய்ரோவின் அப்பாஸியாவில் ரானுவம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. நேற்று முன்தினம் இங்கு 2 எதிர்ப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.தாக்குதலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி ராணுவம் 170 பேரை கைதுச் செய்தது.
அப்பாஸிய்யா சதுரம், பாதுகாப்பு அமைச்சக வட்டாரம், நகரத்தில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவ கவுன்சில் உறுப்பினர் முக்தார் அல் முல்லா தொலைக்காட்சியில் தெரிவித்தார். தாக்குதலில் 296 பேர் காயமடைந்துள்ளனர். 131 பேர் மருத்துவமனையில் சிகிட்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் நகரத்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக