புது தில்லி :சவூதி அரேபியாவுக்கு ஹஜ் செல்வதற்கு மத்திய அரசு மானியம் வழங்குவதை படிப்படியாக பத்து ஆண்டுகளுக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை வரவேற்றுள்ள ஆர்.எஸ்.எஸ் பத்து ஆண்டு என்பது அதிகம், உடனே ஹஜ் மானியத்தை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்சின் அதிகாரபூர்வ பத்திரிகையான ஆர்கனைசரில் வெளியான தலையங்கத்தில் அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டிய நாட்டில் ஒரு மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் சலுகைகள் தருவது சரியான முடிவல்ல என்று எழுதப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்கு மானியம் வழங்குவது அரசியல் தந்திரமாக இந்தியாவில் மாறி விட்டது என்று கூறியுள்ள ஆர்.எஸ்.எஸ் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மேற்கொள்ளும் மத சடங்குகளுக்கு எப்படி மதசார்பற்ற அரசு மானியம் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள ஆர்.எஸ்.எஸ் மானியம் பெற்று ஹஜ்ஜுக்கு செல்வது இஸ்லாத்துக்கு முரணானது என்று பல முஸ்லீம்களே கூறுவதாகவும் கூறியுள்ளது.
இம்மானியம் வழங்கும் செயலால் தற்போது ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஜெருசலத்துக்கு யாத்திரை செல்லும் கிறித்தவர்களுக்கு மானியம் வழங்க யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் ஹஜ் மானியமாக வழங்கப்படும் 826 கோடியை கொண்டு நாட்டில் உள்ள புனித தலங்களை சீரமைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக