வெள்ளி, மே 04, 2012

அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Muslim Community in America Increasing Dramaticallyவாஷிங்டன்:முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக நடக்கும் வேளையிலும் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் முஸ்லிம் மக்கள்தொகை மிகவும் அதிகரித்துள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2000-ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது.இத்தகவலை Association of Statisticians of American Religious Bodies (ASARB) உறுப்பினர் டெய்ல் ஜோன்ஸ்
தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் தற்பொழுது அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், 26 மாநிலங்களில் மர்மோன் என்ற மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 45 சதவீதம் அதிகரித்துள்ள இம்மதத்தினர் 61 லட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். அதேவேளையில் எந்த மதத்தையும் சாராதவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
அமெரிக்காவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் பேர் இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் இவர்களில் 5 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5.89 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழுகின்றனர். கிறிஸ்தவ கத்தோலிக்க பாதிரியார்களின் பாலியல் சேட்டைகள் வெளியானதைத் தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.
புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். ராக்கி மவுண்டன் மாநிலத்தில் இவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக