வியாழன், மே 10, 2012

ரஷ்ய விமானம் இந்தோனேஷியாவில் மாயம் !

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த புதிய விமானமொன்று இந்தோனேஷியாவின் மலைப் பகுதிகளின் மீது பறக்கும் போது பயணிகளுடன் மறைந்து போனது.
இந்த விமானத்தை விற்பதற்கான மாதிரி ஓட்டமாக வானில் பறந்த இவ்விமானத்தில் இந்தோனேஷிய தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்கள் என 50 பேர் வரை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜகார்தா விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரம் மதியம் 2:21-க்கு விமானம் கிளம்பியது.
வானில் பறக்கும்போது 10,000 அடியிலிருந்து 6,000 அடிவரை உயரம் குறைந்து பறப்பதற்கு விமானிகள் அனுமதி கேட்டுள்ளனர்.
பிறகு அடுத்த 21 நிமிடத்தில் ஸலாக் மலைத்தொடருக்கு அருகே ரேடாரிலிருந்து விமானம் மறைந்து விட்டது. விமானம் மற்றும் நிலைபற்றி ஏதும் தெரியாத நிலையில் ராணுவம், போலீஸ் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோவியத் சிதறுண்ட பிறகு ரஷ்யாவின் சுக்ஹோய் (Sukhoi) நிறுவனம் முதன் முதலாய் வடிவமைத்த முதல் ரஷ்ய விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக