குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வற்புறுத்தல் காரணமாகவே பாஜகவின் பொறுப்பில் இருந்து விலகியதாக சஞ்சய் ஜோஷி கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களாகவே பாரதீய ஜனதா கட்சியில் நடைபெற்று வரும் உள்கட்சிப் பூசல் கடந்தவாரம் மும்பையில் நடைபெற்ற அக்கட்சியில் செயற்குழு கூட்டத்திற்குப் பின் வெளிவரத் தொடங்கியது.மும்பை செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவே, இரண்டாம் நாள் கூட்டத்தை அத்வானி புறக்கணித்தார். இதுபோலவே பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு மிகவும் நெருக்கமான உயர் மட்டத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஜோஷியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
ஆனால் ஜோஷியின் இக்குற்சாட்டடை பாஜக மறுத்துள்ளது.
இந்நிலையில், கட்சியின் பொறுப்பில் இருந்து மட்டும்தான் ஜோஷி விலக விரும்பியதாகவும் கட்சி மேலிடம் அவரை கட்சியிலிருந்தே நீக்கியுள்ளது என்றும் ஜோஷியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக