ஞாயிறு, ஜூன் 17, 2012

கம்பியின் மீது நடந்தபடி நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்து அமெரிக்கர் புதிய சாதனை

கம்பியின் மீது நடந்தபடி நயாகரா நீர்வீழ்ச்சியை கடந்து அமெரிக்கர் புதிய சாதனைஅமெரிக்கா-கனடா நாடுகளின் எல்லையில் உலகின் மிகப்பெரிய நயாகரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீண்ட அகன்ற பரப்பளவில் தண்ணீர் பொங்கி விழும் அந்த இயற்கை காட்சியை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்.
 இந்த நீர்வீழ்ச்சியின் குறுக்கே இரும்பு கம்பியை அமைத்து அதன் மீது நடந்து கடந்து செல்ல அமெரிக்காவை சேர்ந்த நிக் வாலெண்டா(வயது33) தீர்மானித்தார்.
 
இவர் ஏற்கனவே அமெரிக்காவில் உயரமான பல இடங்களில் கம்பி மீது நடந்து சாதனை படைத்தவர். இவர் சர்க்கஸ் கலைஞரும் ஆவார். அதன்படி நிக் வாலெண்டா நேற்று அமெரிக்க பகுதியில் இருந்து தனது இந்த சாதனையை தொடங்கினார்.
 
நீர்வீழ்ச்சியில் பொங்கி விழும் தண்ணீரின் ஆர்ப்பரிப்பு சத்தம், சாரல், சுழற்காற்று ஆகியவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு அவர் 1,800 அடி தூரத்தை 30 நிமிடங்களில் வெற்றிகரமாக கடந்தார். இது புதிய உலக சாதனையாகும்.
 
நயாகரா நீர்வீழ்ச்சியை கம்பி மீது நடந்து கடந்த முதல் நபர் என்ற பெருமையையும் நிக் வாலெண்டா பெற்றார். இந்த வியக்க வைக்கும் சாதனை நிகழ்ச்சியை நேரில் காண கனடா நாட்டு பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்றார்கள்.
 
அவர் வெற்றிகரமாக கடந்து முடித்ததும் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள். அதன்பிறகு நிக் வாலெண்டா நிருபர்களிடம் கூறுகையில், நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன். நம்மால் செய்ய இயலாது என்று ஒன்றும் இல்லை. இதை மனதில் நிறுத்திக் கொண்டால் வெற்றி பெறலாம் என்றார்.
 
இதற்கு முன்பு பலர் இந்த நயாகரா நீர்வீழ்ச்சியை கடக்க முயன்று தோல்வியையே தழுவி இருக்கிறார்கள். இதனால் நீர்வீழ்ச்சியை கடக்க அதிகாரிகள் அனுமதி கொடுப்பதில்லை. என்றாலும் நிக் வாலெண்டா ஏற்கனவே பல சாதனை நிகழ்த்தியவர், சர்க்கஸ் கலைஞர் என்பதால் அனுமதி கொடுத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக