வெள்ளி, ஜூன் 15, 2012

துருக்கி நிவாரண கப்பல் தாக்குதல்: நெதன்யாகு குற்றவாளி என இஸ்ரேல் அரசு ஏஜன்சி !

Watchdog criticises Israel PM over flotilla raidடெல் அவீவ்:துயரத்தை அனுபவித்து வரும் காஸ்ஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற துருக்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தி 9 தன்னார்வ தொண்டர்களை அநியாயமாக படுகொலைச் செய்த சம்பவத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு மீது இஸ்ரேல் அரசு ஏஜன்சி கடுமையாக
குற்றம் சாட்டியுள்ளது.
ஒன்பது துருக்கி தன்னார்வ தொண்டர்களின் படுகொலைக்கு காரணமான ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்ட பெஞ்சமின் நெதன்யாகுவை ஸ்டேட் கம்ப்ட்ரோலர் மிச்சா லிண்டன்ஸ் ட்ரோஸ் தனது அறிக்கையில் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
153 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், நிவாரண கப்பலை ராணுவ ரீதியாக எதிர்கொள்ள நெதன்யாகு கலந்தாலோசிக்காமல் முடிவு எடுத்தார் என்று அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துருக்கி நிவாரண கப்பல் காஸ்ஸாவை நோக்கி வருவதை குறித்து நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சருடனும், வெளியுறவுத்துறை அமைச்சருடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக பதிவுச்செய்யவில்லை என்று இஸ்ரேல் அரசு ஏஜன்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக